தமிழகத்தில் இன்று 30 ஆயிரத்திற்கு கீழ் சரிந்தது கொரோனா பாதிப்பு : நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை…
Author: kavin kumar26 ஜனவரி 2022, 8:48 மணி
சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 47 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 37,359 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக இன்று 29,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த நாட்களாக 30 ஆயிரத்திக்கும் மேல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இதனால் மொத்தம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 32,24,236 ஆகவும், கடந்த 25 மணி நேரத்தில் 47 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,359 ஆகவும் உள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 27,507 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதித்த 29,73,185 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,13,692 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 5,973 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கோவையில் 3740 பேருக்கும், செங்கல்பட்டில் 1883 பேருக்கும், திருப்பூரில் 1787 பேருக்கும், சேலத்தில் 1457 பேருக்கும், ஈரோட்டில் 1302 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
0
0