சென்னைக்கு மிக அருகில் நெருங்கும் புயல் : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 December 2022, 8:39 pm

சென்னை அருகே 130 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது மாண்டஸ் புயல். மாமல்லபுரத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில் உள்ளது மாண்டஸ் புயல். மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை‌சாலை வழியாக புதுச்சேரி செல்லும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டது. மற்ற இடங்களில் வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது மாண்டஸ் புயல். சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 170 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது. இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மாமல்லபுரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!