மசோதாக்களை நிலுவையில் வைத்த விவகாரம்… ஆளுநருக்கு அதிரடி உத்தரவு போட்ட உச்சநீதிமன்றம் ; குஷியில் திமுக…!!!

Author: Babu Lakshmanan
10 November 2023, 4:09 pm
Rn-ravi---sc---updatenews360
Quick Share

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கும், அரசின் கோப்புகளுக்கும் உரிய பதில் அளிக்காமல், கிடப்பில் போட்டுள்ளார். இதற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால அளவை நிர்ணயிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் செயல்பாடுகளை ஆளுநர் முடக்குவதாகவும், மக்களின் உரிமைகளையும் ஆளுநர் பறிப்பதாக தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனைக்கேட்ட நீதிபதிகள், ஆளுநருக்கு எதிரான வழக்கு முக்கியமானதாக பார்ப்பதாகவும், இந்த வழக்கை தீபாவளி விடுமுறைக்கு பிறகு விசாரிக்கலாம் என்று தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஆளுநரின் செயலாளர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவிடக் கோரி, வழக்கு விசாரணையை 24ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

Views: - 171

0

0