தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது : முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2022, 8:23 am
Cabinet Meeting - Updatenews360
Quick Share

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடக்கவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ள இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அக்டோபர் மாதம் கூடவுள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

முக்கியமாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கை, ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு குறித்த விசாரணை அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள், புதிய தொழில் முதலீடுகள், வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து துறை அமைச்சர்களுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. மேலும், பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 420

0

0