பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.36,000 கோடி… மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை : தமிழக பட்ஜெட்டில் அதிரடி

Author: Babu Lakshmanan
18 March 2022, 11:18 am

சென்னை : அரசுப் பள்ளிகளில் மாணவிகளின் மேல்படிப்புக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் வெளியிட்டு வருகிறார். அவர் கூறியதாவது :-

இக்கட்டான சூழலில் ஆட்சி பொறுப்பேற்றாலும், தொலைநோக்கு திட்டங்களை வகுத்துள்ளோம். கொரோனா பெருந்தொற்றின் 2வது மற்றும் 3வது அலை மிகச்சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டது. வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்திய நிலை மாற்றப்பட்டுள்ளது. சிறந்த நிதி நிர்வாகத்தை திமுக அரசு கடைபிடித்து வருகிறது.
அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.7,000 கோடி குறைகிறது.

உக்ரைன் – ரஷ்யா போரால் பொருளாதாரத்தை மீட்டெக்கும் முயற்சியிலும் பாதிப்பு ஏற்படக் கூடும். சமூக நலத்திட்டங்கள் அனைத்தும் வழக்கம் போல எந்த தடைகளும் இன்றி செயல்படுத்தப்படும். தமிழ் மொழியின் தொன்மையையும், செம்மையையும் போற்றிட பிற மொழிகளோடு ஒப்பிட்டு ஆய்வு செய்ய நடவடிக்கை. தமிழ்வேர் சொற்களை முன்னிலைப்படுத்தி, தமிழ் மொழி வளத்தின் புகழ்பரப்ப மொழி வல்லுநர்கள் குழு அமைக்கப்படும். அகரமுதலி திட்டத்தின் கீழ் தமிழ் மொழியின் வேர்சொற்களை கண்டறியும் ஆய்வு பணி நடைபெறும்.

நவீன நுட்பத்தில் நிலங்களை அளவீடு செய்யும் வகையில் ரோவர் எந்திரங்களை வாங்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு

அரசு நிலங்களை பராமரிக்க சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு

தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்படும்

விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக அருங்காட்சியகம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு

சென்னையில் மழை, வெள்ளத் தடுப்பு பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது

பேரிடர் மேலாண்மைத்துறை ரூ.7,400 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு

காவல்துறைக்கு ரூ.10,285 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சுய உதவிக்குழுக்களுக்கும், விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.4,130 கோடி ஒதுக்கீடு

நீர்வளங்களின் பயன்பாட்டை அதிகரிக்க ரூ.3,384 கோடி ஒதுக்கீடு

சென்னை அருகே ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும்

கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும்

கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.1,315 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்த ரூ.849.20 கோடி நிதி ஒதுக்கீடு

இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் முன்மாதி பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மாணவர்களின் திறன் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 5 லட்சம் மாணவர்களின் திறனை மேம்படுத்த நடவடிக்கை

பள்ளிக்கல்வித்துறைக்கு வரும் நிதியாண்டில் ரூ.36 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

வரையாடுகளை பாதுகாக்கும் திட்டம் – நிதி ஒதுக்கீடு

வனப்பகுதிகளில் வரையாடுகளை பாதுகாக்கும் சிறப்பு திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு

வள்ளலார் பல்லுயிர் காப்பகம் அமைப்புக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு ஒலிம்பிக் பதக்கம் தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ரூ.36 கோடி மதிப்பில் மாவட்ட மைய நூலகங்கள்

டாக்டர் முத்துலுட்சுமி அம்மையார் மகப்பேறு திட்டத்திற்கு ரூ.817 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பி தமிழக மாணவர்களின் கல்விக்காக அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும்

அரசு பள்ளி மாணவிகள், உயர்கல்வி பயில்வதற்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும்

காஞ்சிபுரத்தில் அரசு அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை, உயர்தர மருத்துவமனையாக மேம்படுத்தப்படும்

தமிழ்நாடு அரசின் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1,949 கோடி நிதி ஒதுக்கீடு

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!