தமிழக பட்ஜெட் தாக்கல்… எதிர்கட்சி தலைவருக்கு பேச அனுமதி மறுப்பு.. அதிமுக வெளிநடப்பு

Author: Babu Lakshmanan
18 March 2022, 11:00 am
Quick Share

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த ஆண்டு பொறுப்பேற்று, தனது முதல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. தமிழக அரசுக்கு கடன் சுமை அதிகம் இருப்பதால், தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற முடியாது என்றும் அறிவித்து, பணபலன் சார்ந்த வாக்குறுதிகளை கிடப்பில் போட்டுள்ளது. மேலும், புதிய அறிவிப்புகளை வெளியிடாமல், ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, செயல்படுத்தாமல் இருந்த திட்டங்களிலேயே தமிழக அரசு கவனம் செலுத்தி வந்தது.

இந்த நிலையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது முதல் முழு பட்ஜெட்டைஇன்று தாக்கல் செய்யத் தொடங்கினார். அப்போது, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு முற்பட்டார். ஆனால், பட்ஜெட் தாக்கல் செய்யப்படவதால், பேசுவதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பேச அனுமதி மறுத்ததைக் கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்தது. முன்னாள் அமைச்சர்கள் மீது திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கை தொடர்பாக கேள்வி எழுப்ப அதிமுக திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 487

0

0