மக்களே உஷார்… இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்… குறிப்பாக, இந்த நேரத்தில் மட்டும் மறந்தும் வெளியே போயிடாதீங்க.!!

Author: Babu Lakshmanan
4 May 2022, 8:52 am
summer - updatenews360
Quick Share

சென்னை : தமிழகம் முழுவதும் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று முதல் தொடங்குகிறது.

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், பகல் நேரங்களில் வெளியே நடமாடுவதை பொதுமக்கள் பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர். அதோடு, தாகம் தீர்க்கும் தர்ப்பூசணி, மோர் உள்ளிட்டவற்றை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.

summer started - updatenews360

ஆண்டுதோறும் சித்திரை மாதம் 21ம் தேதி முதல் வைகாசி 14ம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். இதனை கத்திரி வெயில் அல்லது அக்னி நட்சத்திரம் என்று அழைப்பார்கள். பஞ்சாங்கத்தின் படி, 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் இருப்பதாக கூறப்படுகிறது. வழக்கத்தைவிட இந்த நாட்களில், சூரியன் அதிக வெப்பத்தை கொடுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். அந்த வகையில், இன்று கத்திரி வெயில் தொடங்கி வருகிற 28-ந் தேதியுடன் நிறைவடைகிறது.

Summer girls - updatenews360

அக்னி நட்சத்திரத்தின் போது வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகமாக இருக்கும் என்றும், முதல் 7 நாட்களில் மெதுவாக வெப்பத்தின் தாக்கம் ஏறுமுகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் கணித்துள்ளனர்.

fruits that helps to over summer

இந்த காலகட்டத்தில் பகல் 10 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், இந்த சமயங்களில் காரம் உள்ள பொருட்களை தவிர்த்து இளநீர், நுங்கு போன்ற குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Views: - 540

0

0