சிபிஐயின் அடுத்த குறி முதலமைச்சர் ஸ்டாலின்… அண்ணாமலை கிளப்பிய ரூ.200 கோடி விவகாரம் ; தமிழக அரசின் செயல் குறித்து விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
15 June 2023, 9:20 am

சென்னை: சிபிஐ மீது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டதாகக் கூறி, தமிழக அரசின் செயலை அண்ணாமலை விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அவரை கைது செய்தது.

இதையடுத்து, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், மத்திய புலனாய்வுத் துறை அளிக்கப்பட்டிருந்த அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற்றது. தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பு மாநில அரசின் முன் அனுமதியை பெறுவது அவசியம் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவை விமர்சித பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முந்தைய திமுக ஆட்சியின் போது மெட்ரோ ரயில் திட்ட ஒப்பந்தத்திற்காக ரூ 200 கோடி பெற்றுக் கொண்டார் என தமிழக பாஜக கடந்த ஏப்ரல் மாதம் குற்றம்சாட்டியிருந்தது என்றும், இன்று தமிழக அரசின் அனுமதியில்லாமல் சிபிஐ விசாரணை நடத்த முடியாது என ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறிய அவர், இதை பார்க்கும் போது சிபிஐ விரைவில் தனது வீட்டிற்கு விசாரணைக்கு வரும் என அச்சத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இருப்பது தெரிகிறது என விமர்சனம் செய்துள்ளார்.

  • producer asked 40 lakhs to prajin for shooting 40 லட்சம் கொடுத்தால் தான் ஷூட்டிங்?- கறார் காட்டிய வடிவேலு பட தயாரிப்பாளர்! அடக்கொடுமையே…