இனி தமிழக அரசின் அனுமதியின்றி சிபிஐ விசாரணை நடத்த முடியாது ; அனுமதியை வாபஸ் பெற்றது தமிழக அரசு..!!

Author: Babu Lakshmanan
15 June 2023, 8:16 am
Quick Share

சென்னை ; மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ)-க்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை வாபஸ் பெற்றது தமிழக அரசு.

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மத்திய புலனாய்வுத்‌ துறை எந்த ஒரு மாநிலத்தில்‌ விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும்‌, அந்தந்த மாநில அரசின்‌ முன்‌ அனுமதியைப்‌ பெறவேண்டும்‌ என டெல்லி சிறப்புக்‌ காவல்‌ அமைப்புச்‌ சட்டம்‌ 1946-ன்‌ பிரிவு 6-ன்படி வகுக்கப்பட்டுள்ளது.

கடந்த 1989 மற்றும்‌ 1992ஆம்‌ ஆண்டுகளில்‌, மேற்படி சட்டத்தின்‌ கீழ்‌, சிலவகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டிருந்த பொதுவான முன்‌ அனுமதியை, இன்று தமிழ்நாடு அரசு திரும்பப்பெற்று ஆணையிட்டுள்ளது.

இதன்படி, மத்திய புலனாய்வுத்‌ துறை, தமிழ்நாட்டில்‌ இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக, தமிழ்நாடு அரசின்‌ முன்‌அனுமதியை பெற்று, விசாரணையை மேற்கொள்ள வேண்டும்‌.

இதுபோன்ற ஆணையினை ஏற்கெனவே மேற்குவங்கம்‌, ராஜஸ்தான்‌, கேரளா, மிசோரம்‌, பஞ்சாப்‌, தெலுங்கானா போன்ற பல்வேறு மாநிலங்கள்‌ பிறப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

Views: - 363

0

0