சவுக்கு சங்கர் மீது தாக்குதலா? பத்திரிகையாளர் தாக்கப்படுவது திமுக ஆட்சியில் சர்வசாதாரணம்.. கொந்தளித்த இபிஎஸ்..!!

Author: Udayachandran RadhaKrishnan
7 May 2024, 1:40 pm
EPS
Quick Share

சவுக்கு சங்கர் மீது தாக்குதலா? பத்திரிகையாளர் தாக்கப்படுவது திமுக ஆட்சியில் சர்வசாதாரணம்.. கொந்தளித்த இபிஎஸ்..!!

சமீபத்தில் சவுக்கு சங்கர் யுடியூப் சேனல் ஒன்றிக்கு நேர்காணல் அளித்தபோது, காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார். இதையடுத்து சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். யூடியூபர் சவுக்கு சங்கர் மீது சைபர் கிரைம் போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

இந்த நிலையில் சவுக்கு சங்கரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் ஜெயிலில் பத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்து அடித்துள்ளதாகவும் கோவை சிறையில் சவுக்கு சங்கரை சந்தித்த பின் அவரது வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. கை உடைந்து விடக்கூடாது என பிளாஸ்டிக் பைப்பில் துணி சுற்றி அடித்துள்ளனர்.

ஆனாலும், அடி பலமாக விழுந்ததால் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. வீக்கத்தை குறைப்பதற்காக ஆயின்மெண்ட் போட்டு, வலி நிவாரணி மாத்திரைகளை கொடுத்துள்ளனர். வலி நிவாரணி அதிகம் கொடுத்தால் அவரது கிட்னி பாதிக்கப்பட உள்ளது.

சவுக்கு சங்கர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டதும் 10க்கும் மேற்பட்ட சிறை காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவரது கண்களை கட்டிவிட்டு, குச்சியில் துணி சுற்றி காவலர்கள் அவரை தாக்கியதாக சவுக்கு சங்கர் என்னிடம் கூறினார்., என்று சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், சமூக ஊடக பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் ஒரு சில சர்ச்சைக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டி கைதுசெய்துள்ளது காவல்துறை.

அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறானதாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோவை சிறையில் அவரை சந்தித்தப்பின் அளித்த பேட்டியில், சவுக்கு சங்கர்சிறையில் அடைப்பதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நல்ல நிலையில் சிறைக்கு சென்றார்.

மேலும் படிக்க: கட்டணம் செலுத்தாமல் சுங்கச்சாவடி ஊழியரை காரை ஏற்றி கொல்ல முயற்சி.. வெளியான ஷாக் CCTV காட்சி!

இந்நிலையில் கோவை சிறையில் அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார் எனவே மாண்புமிகு நீதிபதி ஒருவரே நேரில் அனுப்பி சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டி மனு அளித்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். பத்திரிக்கை சுதந்திரம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வாய்ச்சவடால் விடும் விடியா திமுக அரசில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது.

மேலும், பெண்களை இழிவாகப் பேசிய, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட பல திமுகவினர் மீது இந்த விடியா அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அவர்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். சட்ட நடவடிக்கைகளும் நீதியும் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். சட்டத்தை காவல் துறையே கையில் எடுப்பது என்பது ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இத்தகைய தாக்குதல்கள் தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Views: - 68

0

0