மத ரீதியிலான இட ஒதுக்கீடு கோரிக்கை.. அபாயத்திற்கான எச்சரிக்கை மணி : சொல்கிறார் தமிழக பாஜக துணை தலைவர்!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2024, 6:28 pm
narayana
Quick Share

மத ரீதியிலான இட ஒதுக்கீடு கோரிக்கை.. அபாயத்திற்கான எச்சரிக்கை மணி : சொல்கிறார் தமிழக பாஜக துணை தலைவர்!

14.3% உள்ள இஸ்லாமியர்களுக்கு 15% பங்கு கிடையாதா? உரிமை கிடையாதா? என்று கேட்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் திமுகவின் பாராளுமன்ற ரவிக்குமார் அவர்கள். இட ஒதுக்கீடு என்பது இந்தியாவில் ஜாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளினால் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பட்டியிலின, பழங்குடியின, இதை பிற்படுத்தப்பட்ட மக்களை மேம்படுத்த உருவாக்கப்பட்ட அமைப்பு.

அதாவது, பல்வேறு ஜாதி வேறுபாடுகள் உள்ள ‘ஹிந்து’ என்ற அமைப்பில் வாழ்ந்து வரும் மக்களுக்காக என்பதே விதி, சட்டம். இதை நாம் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையிலே தான் இட ஒதுக்கீடானது இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.

யார் ஒருவர் இஸ்லாமியர் இல்லையோ, கிறிஸ்துவர் இல்லையோ, பார்ஸி இல்லையோ அவர் ‘ஹிந்து’ என்கிறது இந்திய அரசியலமைப்பு சட்டம். அதன்படி மத ரீதியாக தங்களை அடையாளம் கொள்வோருக்கு இட ஒதுக்கீடு என்பது பொருந்தாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்

ஏனெனில், இஸ்லாமிய, கிருஸ்துவ மதங்களில் ஜாதிகள் இல்லை, அதனால் சமூக ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் என்றே அம் மதங்கள் சொல்கின்றன. ஆனால், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டிலிருந்து உள் இடஒதுக்கீடாக மத அடிப்படையில் சில அரசுகள் பிரித்து கொடுத்துள்ளன.

சில மாநிலங்களில் பாதிக்கப்பட்ட சமுதாயத்தினர் நீதிமன்றங்களை அணுகிய போதெல்லாம், மத ரீதியிலான இட ஒதுக்கீட்டை ஏற்க மறுத்து, அவை சட்ட விரோதமானது என்று நீதி மன்றங்கள் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு எனில், எதற்காக ஒரு மதத்திற்கு மட்டும் மத ரீதியிலான இட ஒதுக்கீடு? அப்படி மத ரீதியாக வழங்கப்பட்டால் அது அடிப்படை இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே தகர்ப்பதாகாதா? ஒரு வேளை, இஸ்லாமியர்களுக்கு மட்டும் மத ரீதியாக இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தால், கிருஸ்துவ, சமண மதத்தினருக்கும் அதே அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுக்காதா?

இந்நிலையில், தற்போதைய இட ஒதுக்கீட்டின் அடிப்படை தன்மையை மாற்றி, ஹிந்துக்களின் மக்கள் தொகைக்கேற்பவே மத அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்ற குரல்கள் வலுப்பெற்று சட்ட சிக்கல்களை உண்டாக்காதா? அது ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டின் தன்மையை பாதித்து விடாதா?

மேலும் படிக்க: குற்றால அருவியில் சிக்கி உயிரிழந்தது வ.உ.சியின் பேரனா? இணையத்தில் பரவும் தகவல்.. உண்மை இதுதான்!

மத ரீதியிலான இட ஒதுக்கீட்டை செயல்படுத்தினால், மத மாற்றங்கள் அதிக அளவில் நிகழ வாய்ப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக மதங்களுக்கிடையே கடும் வேற்றுமைகளும், பதட்டங்களும் ஏற்படும் என்பதை மறுக்க முடியுமா? மத ரீதியிலான இட ஒதுக்கீடு சட்ட விரோதம் என்று அண்ணல் அம்பேத்கர் சுட்டிக்காட்டியதை மறந்து விட்டு, மறைக்க முயல்பவர்கள், நாட்டின் அமைதியை குலைக்க முயல்பவர்கள் தான் என்பதை மறுக்க முடியாது.

மத மாற்றம் தேசிய அபாயம் என்றால், மத ரீதியிலான இட ஒதுக்கீடு கோரிக்கை அந்த அபாயத்திற்கான எச்சரிக்கை மணி என கூறியுள்ளார்.

Views: - 126

0

0