தமிழகத்தில் ஐசியூவில் இருக்கும் காங்கிரஸ் : இன்று புதுச்சேரி.. அடுத்து தமிழகம்தான் : ராகுலுக்கு அண்ணாமலை பதிலடி

Author: Babu Lakshmanan
3 February 2022, 9:58 am
Quick Share

சென்னை : தமிழகத்தை பாஜக ஒருபோதும் ஆளவே முடியாது என்று கூறிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தமிழகத்தை வைத்து பாஜகவை கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசியதாவது :-நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழகம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. அது உங்களின் காதுகளுக்கு எட்டவில்லை. அவர்களின் கோரிக்கையை மறுத்து அவர்களை வெளியேற்றுகிறீர்கள்.

இந்தியா என்பது கூட்டாட்சி. தமிழகத்தில் உள்ள என் சகோதரரிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என நான் கேட்பேன். அவர் தேவையை என்னிடம் சொல்வதுபோல எனக்கு தேவையானதை நானும் கேட்டுப் பெறுவேன். இதுதான் கூட்டாட்சி. இது ராஜ்ஜியம் அல்ல. உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது, என ஆக்ரோஷமாக பேசினார். அவரது பேச்சுக்கு எதிர்கட்சிகள் கைதட்டி வரவேற்பு கொடுத்தன.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது பாணியில் டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :- வழக்கம் போல உங்ளின் பேச்சை கேட்டு சிரித்து மகிந்தோம் ராகுல் ஜி. தமிழகத்தை பாஜக ஆளவே முடியாது என் நீங்கள் கூறுனீர்கள். இந்த விவகாரத்தில் நான் தமிழகத்தின் மைந்தன் என்ற வகையில் உங்களை வழிநடத்த விரும்புகிறேன் ராகுல் ஜி.

தமிழகத்தில் நீங்கள் திமுக என்னும் ஆக்சிஜன் உதவியுடன் இருக்கிறீர்கள். புதுச்சேரியில் நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம். இது ஒரு மைல்கல். அதன் அடுத் ஜங்ஷன் தமிழகம்தான். வரலாற்றை எப்போதும் மறக்காதீர்கள் சார். அமேதியில் நடந்தது போன்றதொரு வரலாறு மீண்டும் நிகழ்த்தப்படும். அடுத்த நீங்கள் போலியாக ஒரு சர்ச்சையை உருவாக்கும் வரை விடைபெறுகிறேன், என்று பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலையின் இந்த பதிலடிக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக காங்கிரஸ், திமுகவினரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 1239

0

0