ஜுனியர் உலகக்கோப்பையில் அசத்தும் இந்திய அணி… ஆஸி.,யை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

Author: Babu Lakshmanan
3 February 2022, 8:45 am
Quick Share

ஜுனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 96 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்திய அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஜுனியர் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் 14வது சீசன் விண்டீசில் நடந்து வருகிறது. இதில், மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுகளுக்கு பிறகு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

இதில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதைத் தொடர்ந்து, நடைபெற்ற 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் நேற்று மோதின. இதில், ‘டாஸ்’ வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் யாஷ் தல் சதம் (110) விளாசி அதிரடி காட்டினார். மற்றொரு வீரர் ஷேக் ரஷீத் 94 ரன்கள் குவிக்க, 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து, பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 194 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனால், 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

5ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

Views: - 1947

0

0