தமிழகத்தில் பாதிப்புகளை மிஞ்சிய டிஸ்சார்ஜ் : இன்றைய கொரோனா விபரம்..!

3 September 2020, 6:26 pm
coronavirus_updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு எண்ணிக்கை 4 லட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால், தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளினால், கடந்த சில நாட்களாக ஒரே நிலையை எட்டியுள்ளது. அந்த வகையில், இன்று 5,892பேருக்கு பாதிப்பு தென்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வந்த 37 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,45,851 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் இன்று 968 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 92பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலியானோர் எண்ணிக்கை 7,608 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 6,110 பேர் குணமடைந்தனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 86 ஆயிரத்து 173 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 0

0

0