அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள் : வியாபாரிகள் ரொக்கம் எடுத்துச் செல்ல கட்டுப்பாடுகள்… வேறென்ன விதிமுறைகள் தெரியுமா..?

Author: Babu Lakshmanan
26 January 2022, 7:34 pm
TN Election Commission - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் தற்போது முதலே அமலுக்கு வந்துள்ளன.

649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக பிப்.,19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 28ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் நடக்கும் பகுதிகளில் அமலுக்கு வந்துள்ளன. வாக்குப்பதிவு பிப்.,19ம் தேதி நடக்கும். தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்.,22ம் தேதி எண்ணப்படும்.

மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் ரூ.85,000 வரை செலவு செய்யலாம். சென்னை பெருநகர மாநகராட்சியில் மட்டும் வேட்பாளர் ரூ.90,000 வரை செலவு செய்யலாம். தேர்தல் செலவின கணக்குகளை பிப்.22-ம் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும்

தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மார்ச் 2ம் தேதி பதவியேற்பார்கள். மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிகள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர் பதவிகளுக்கு மார்ச் 4ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும்

முன்னதாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான கொரானா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.

அதாவது, அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்.

அதிக கூட்டம் சேர்க்க தடை

அனைத்து அலுவலங்களுக்கு முன்பாக கிருமி நாசினி இருக்க வேண்டும்

அனைத்து மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்

வியாபாரிகள் 50 ஆயிரம் வரை கொண்டு செல்லலாம்

முடிந்த வரைவில் தேர்தல் அதிகாரிகளுக்கு இணையதளம் மூலம் பயிற்சி அளிக்க வேண்டும்

வீடு வீடாக பிரச்சாரம் செய்ய 3 பேருக்கு மட்டும் அனுமதி

அறிகுறி உள்ளவர்கள் மாலை 5 மணி முதல் 6 வரை வாக்களிக்கலாம்

விதிளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை

முகவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 560

0

0