பிப்., 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு… எவற்றுக்கெல்லாம் கட்டுப்பாடுகள் தெரியுமா..? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின் முழு விபரம்!!

Author: Babu Lakshmanan
27 January 2022, 8:26 pm
Lockdown temple - school - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் அதிகரித்துள்ள வேளையிலும், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளையும், ஒரு சில கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தற்போது ஓரளவுக்கு குறைந்திருந்தாலும், நாளொன்று சராசரி பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கியே பதிவாகி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசும் வார இறுதி ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்குகளை அமல்படுத்தியுள்ளது. மேலும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி கிடையாது. இந்தக் கட்டுப்பாடுகள் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது

கொரானா ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பது குறித்தும், பள்ளிகளை திறப்பது குறித்தும் சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், பிப்.,1 முதல் பிப்.,15 வரை சிலவற்றிற்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு,

 1. சமுதாய, கலாச்சார மற்றும்‌ அரசியல்‌ கூட்டங்கள்‌ போன்ற பொது மக்கள்‌ கூடும்‌ நிகழ்வுகளுக்கு தடை தொடரும்‌.
 2. நகர்புற உள்ளாட்சி தேர்தல்‌ நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல்‌ ஆணையத்தினால்‌ வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்‌ பின்பற்ற வேண்டும்‌.
 3. மழலையர்‌ விளையாட்டு பள்ளிகள்‌, நர்சரி பள்ளிகள்‌ செயல்பட அனுமதி இல்லை.
 4. பொருட்காட்சிகள்‌ நடத்த அனுமதி இல்லை.
 5. அரசு மற்றும்‌ தனியாரால்‌ நடத்தப்படும்‌ அனைத்து கலை விழாக்களுக்கும்‌ அனுமதி இல்லை.
 6. உணவகங்கள்‌, விடுதிகள்‌, அடுமணைகள்‌, தங்கும்‌ விடுதிகள்‌ மற்றும்‌ உறைவிடங்களில்‌ 50% வாடிக்கையாளர்கள்‌ மட்டும்‌ அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்‌.
 7. திருமணம்‌ மற்றும்‌ திருமணம்‌ சார்ந்த நிகழ்வுகள்‌ அதிகபட்சம்‌ 100 நபர்களுடன்‌ மட்டும்‌ நடத்த அனுமதிக்கப்படும்‌.
 8. இறப்பு சார்ந்த நிகழ்வுகள்‌ 50 நபர்களுக்கு மிகாமல்‌ அனுமதிக்கப்படும்‌.

9, துணிக்கடைகள்‌ மற்றும்‌ நகைக்கடைகளில்‌ ஒரு நேரத்தில்‌ 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல்‌ செயல்படுவதை உறுதி செய்யுமாறு உரிமையாளர்கள்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

 1. கேளிக்கை விடுதிகளில்‌ உள்ள உடற்பயிற்சி கூடங்கள்‌, விளையாட்டுக்கள்‌, உணவகங்கள்‌ ஒரு நேரத்தில்‌ 50% வாடிக்கையாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.
 2. உடற்பயிற்சி கூடங்கள்‌ மற்றும்‌ யோகா பயிற்சி நிலையங்கள்‌ ஒரு நேரத்தில்‌ 50% வாடிக்கையாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.
 3. அனைத்து திரையரங்குகளிலும்‌ அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில்‌ அதிகபட்சம்‌ 50% பார்வையாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.
 4. உள்‌ விளையாட்டு அரங்குகளில்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி 50% பார்வையாளர்களுடன்‌ விளையாட்டு போட்டிகள்‌ நடத்த அனுமதிக்கப்படும்‌. வழக்கமான பயிற்சிகள்‌ நடத்த தடையில்லை.
 5. உள்‌ விளையாட்டு அரங்குகளில்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி 50% பார்வையாளர்களுடன்‌ விளையாட்டு போட்டிகள்‌ நடத்த அனுமதிக்கப்படும்‌. வழக்கமான பயிற்சிகள்‌ நடத்த தடையில்லை.
 6. அனைத்து உள்‌ அரங்குகளில்‌ நடத்தப்படும்‌ கருத்தரங்கங்கள்‌, இசை, நாடகம்‌ போன்ற நிகழ்ச்சிகள்‌ அதிகபட்சம்‌ 50% பார்வையாளர்களுடன்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும்‌.
 7. அழகு நிலையங்கள்‌, சலூன்கள்‌ போன்றவை ஒரு நேரத்தில்‌ 50% வாடிக்கையாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.
 8. அனைத்து பொழுதுபோக்கு/கேளிக்கைப்‌ பூங்காக்கள்‌, நீர்‌ விளையாட்டுகளைத்‌ தவிர்த்து, கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவிகிதம்‌ வாடிக்கையாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

18. பிப்ரவரி 1-ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க அனுமதி

Views: - 452

0

0