ஜெயலலிதாவின் ஆஸ்தான ஐஏஎஸ்-ஐ தேர்வு செய்த தமிழக அரசு… புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம்…!!

Author: Babu Lakshmanan
29 June 2023, 2:34 pm

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து, மே 7ம் தேதி தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் முதல்முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். அன்றைய தினமே மாநில தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார்.

இரண்டு ஆண்டுகள் வெ.இறையன்பு தலைமைச் செயலராகப் பணியாற்றிய நிலையில் நாளையுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவரது ஓய்வையடுத்து, தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பிறப்பித்து உள்ளார்.

இதன்மூலம், தமிழ்நாட்டின் 49வது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளராக சிவ்தாஸ் மீனா பணியாற்றி வருகிறார். 1989ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச்சை சேர்ந்த இவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4 செயலாளர்களில் ஒருவராக சிவ்தாஸ் மீனா பணியாற்றியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?