பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை… பண்டிகையை தொடர்ந்து வரும் சனிக்கிழமையும் விடுமுறை அறிவிப்பு

Author: Babu Lakshmanan
11 April 2022, 6:36 pm
Quick Share

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 16ம் தேதி விடுமுறை அளித்து பள்ளி கல்வி ஆணையர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில் வரும் ஏப்.,14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டும், ஏப்.,15ம் தேதி புனித வெள்ளியும் கொண்டாடப்படுகிறது. வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகள் அரசு விடுமுறை என்பதால், இதைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமையும் அரசு விடுமுறையாக பள்ளி கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.

இதன்மூலம், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையாக அறிவிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 18ம் தேதி வழக்கம் போல பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு பிறகு பள்ளிக்கு சென்றுள்ள மாணவர்களுக்கு, 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், குஷியில் உள்ளனர்.

Views: - 869

0

0