முன்னணி நடிகர்களின் படங்களை மிஞ்சும் டாஸ்மாக் வசூல்.. 2 நாட்களில் ரூ.467 கோடி மது விற்பனை!!!

Author: Udayachandran RadhaKrishnan
13 November 2023, 11:56 am
Tamac- Updatenews360
Quick Share

முன்னணி நடிகர்களின் படங்களை மிஞ்சும் டாஸ்மாக் வசூல்.. 2 நாட்களில் ரூ.467 கோடி மது விற்பனை!!!

தீபாவளி பண்டிகை நடந்து முடிந்த நிலையில் பட்டாசு, புத்தாடை, இனிப்பு விற்பனையை காட்டிலும் டாஸ்மாக் மது விற்பனை பேசு பொருளாக மாறி உள்ளது. கடந்த 2 நாட்களில் தமிழகம் முழுவதும் 467 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும் டாஸ்மாக் நிறுவனம் 5 மண்டலங்களாக பிரித்து டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. பீரா, கீஸ்ட், காட்பாதர், தண்டர்போல்ட் உள்ளிட்ட பிராண்டுகள் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பிறமாநிலங்களில் கிடைக்கும் தரமான பீர்கள் தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை என்ற புகார் இருந்து வரும் நிலையில், முதன்முறையாக பிறமாநிலங்களில் இருந்து பைண்ட் சைஸ் கேன்கள், மற்றும் பாட்டில்களில் உள்ள பீர் ரகங்களை டாஸ்மாக் நிறுவனம் அறிமுகம் செய்து இருந்தது.

இந்த நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 11ஆம் தேதி அன்று

மதுரை மண்டலத்தில் ரூ.52.73 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் ரூ.48.12 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.40.20 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.40.02 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.39.78 கோடிக்கும் மதுவிற்பனை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நவம்பர் 12ஆம் தேதி அன்று திருச்சி மண்டலத்தில் 55.60 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் 52.98 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் 51.97 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் 46.62 கோடிக்கும், கோவை மண்டலத்த்கில் 39.61 கோடிக்கும் மதுவிற்பனை நடந்துள்ளது.

இந்த விவரங்களை வைத்து பார்க்கும்போது, தீபாவளிக்கு முந்தைய நாளில் மதுரை மண்டத்திலும் தீபாவளி அன்று திருச்சி மண்டலத்தித்திலு அதிம மது விற்பனை நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

நவம்பர் 13ஆம் தேதியான இன்றைக்கும் பொதுவிடுமுறை என்பதால் மதுவிற்பனை மேலும் அதிகமாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற தீபாவளி பண்டிகையின் போது 3 நாட்களில் 708 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 244

0

0