அதிதீவிர புயலாக வலுப்பெற்றது ‘டவ் தே’: 5 மாநிலங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு..!!

16 May 2021, 9:15 am
cyclone-tauktae - updatenews360
Quick Share

சென்னை: அரபிக்கடலில் உருவான டவ் தே புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதால் 5 மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டவ்-தே புயல் மணிக்கு 9 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. குஜராத்தில் இருந்து 730 கி.மீ. தெற்கு தென்கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டுள்ளது.

12 மணிநேரத்திற்குள் இது புயல் வலுப்பெற்று நாளை மறுநாள் குஜராத்தின் போர்பந்தர்-நாலியா இடையே கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 175 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டவ் தே புயல் வரும் செவ்வாயன்று குஜராத்தில் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன் 5 மாநிலங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து கேரளா, தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் 50க்கு மேற்பட்ட பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அடுத்த 2 நாட்களில் கேரளா, கர்நாடகா, கோவாவில் கடலோர பகுதிகளில் பெரு மழை பொழிந்து நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Views: - 119

1

0