திமுகவுக்கு எந்த நேரமும் அதே மனநிலை தான்… முதல்வரை போல நடத்தப்படும் உதயநிதி ஸ்டாலின் ; தமிழிசை சவுந்தரராஜன்!!

Author: Babu Lakshmanan
25 December 2023, 7:32 pm

தமிழகத்தில் மக்கள் பாதுகாப்பாக இல்லை என்றும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆய்வு செய்தபோது மன வேதனை அடைந்ததாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த நிவாரண உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிகளை சிந்து பூந்துறை பகுதியில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் நிவாரண பொருட்களையும் வழங்கினார்.

இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்திக்கும் போது அவர் பேசியாவது :- தென் தமிழகத்திற்கு வருவது என்றாலே எப்போதும் மகிழ்ச்சி தரும் ஆனால் இப்போது மிகவும் கவலையுடன் வந்துள்ளேன். குடியரசு தலைவர் தெலுங்கானா மாநிலத்தில் இருந்ததால் அவருடன் இருக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது அவர் சென்றவுடன் நெல்லை, தூத்துக்குடி மக்களை நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்து அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வந்துள்ளேன்.

நான் பார்வையிட்ட பல இடங்களும் மிக மோசமான நிலையில் காட்சியளிக்கிறது. பல கண்மாயிகள் குளங்கள் சேதமடைந்துள்ளது. குளங்கள் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. குளக்கரைகளை முறையாக அரசு பராமரித்து இருக்க வேண்டும். எங்களுக்கு சின்ன முன்னறிவிப்பு கூட கொடுக்கவில்லை என ஏரல் பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். முன்னறிவிப்பு ஏதாவது கொடுத்திருந்தால் பொருட்களையாவது காப்பாற்றி இருப்போம் என வியாபாரிகள் சொல்வது வேதனையை அளிக்கிறது.

தமிழிசை தூத்துக்குடியில் போட்டியிடுவதற்காக தான் இதுபோன்று செய்கிறார் என சேகர்பாபு சொல்கிறார். எப்போதும் வாக்கு தேர்தல் என்ற மனநிலையிலேயே அவர்கள் இருக்கின்றனர். நான் மனிதாபிமானத்தோடு மக்களுக்கு உதவுவதற்காக வந்துள்ளேன். முதல்வருக்கு பின்னால் போகும் கார்களைப் போல உதயநிதி காருக்கு பின்னாலும் அதிக அளவு கார்கள் அணிவித்து செல்கிறது. தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. மத்திய அரசு உடனடியாக ஆயிரம் கோடியை அவசரகால நிவாரணமாக வழங்கி உள்ளது.

பாஜகவின் செய்தி தொடர்பாளர் நான் அல்ல. மக்களுக்கான செய்தி தொடர்பாளர். நான் பார்வையிட்ட பாதிப்பை யாரிடம் எப்படி சொல்ல வேண்டுமோ, அவர்களிடம் அப்படி சொல்லி முறையான நிவாரணத்தை பெற்று தருவேன். ஆளும் கட்சிக்காரர்கள் வீட்டில் தான் அனைத்து நிவாரண பொருட்களும் அதிக அளவில் வைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏன் சேகர்பாபுவிற்கு பதட்டம் என தெரிவிக்கவில்லை.

எப்போதும் வாக்கு தேர்தல் என சேகர் போக்கு சொல்லி வருகிறார். தேசிய பேரிடராக அறிவிப்பு வெளியிட பல நடைமுறைகள் உள்ளது. நிதி கொடுத்தால் எந்த அளவிற்கு பணம் செலவழித்து பணி செய்வார்கள் என்பதை செய்த பணியை பார்த்தாலே தெரிகிறது. சென்னையில் பெய்த அதிக கனமழையை வைத்து தென் மாவட்டங்களில் பெய்து இருந்த கனமழையில் பணி செய்திருக்க வேண்டும்.

முதல்வர் மக்களுடனான பாதிப்பை பார்த்திருக்க வேண்டும். ஆனால், கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்பு என சென்று விட்டார். முதல்வர் வந்தால் ஒன்றுதான், உதயநிதி வந்தால் ஒன்றுதான் என்பதைப் போல தான் உள்ளதை இப்போது பார்க்கும் காட்சிகள் அனைத்தும் இன்று பார்வையிட்ட பாதிப்படைந்த பகுதிகள் தொடர்பான பெரிய அறிக்கையை தயார் செய்து பிரதமரிடமும், நிதி அமைச்சர் இடமும் கொடுக்க உள்ளோம். தேசிய பேரிடராக அறிவித்தால் என்ன நடந்து விடும். நிதியை பெற்று இவர்கள் என்ன செய்து விடுவார்கள் என அவர் தெரிவித்தார்

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?