நம்மை காக்கும் பெண்களை நாமே காக்க வேண்டிய சூழ்நிலை.. கையாளாகாத அரசுக்கு கண்டனம் : இபிஎஸ் கடும் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 January 2023, 6:08 pm

திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகி உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் பொதுக் கூட்டத்தில் எம்பி கனிமொழி கலந்து கெண்டு உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் பெண் காவலர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். அப்போது, தி.மு.க நிர்வாகிகளான ஏகாம்பரம் மற்றும் பிரபு ஆகிய இருவரும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த போலீசார், உடனடியாக அவர்கள் இருவரையும் கைது செய்ய முயன்றனர். ஆனால், தி.மு.க.வினர் போலீசாரிடம் வாக்குவாதம் நடத்தி, அவர்களை கைது செய்ய விடாமல் தடுத்து அனுப்பினர்.

திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்ட கூட்டத்தில் பெண் காவலருக்கு திமுக நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், விமர்சனங்களையும் எழச் செய்துள்ளது.

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பவிதில், திமுகவின் பொதுக் கூட்டத்தில் பெண் காவலர்களை பாலியல் ரீதீயாக துன்புறுத்திய திமுக நிர்வாகிகள், பாதுகாப்பு தருபவர்களையே தன் கட்சியினரிடம் இருந்து பாதுகாக்க முடியாத, காவல்துறையையின் பொறுப்பாளராக இருக்ககூடிய இந்த கையாளாகாத முதலமைச்சருக்கு எனது கடுமையான கண்டனங்கள்.

இது போன்ற தொடர் சம்பவங்கள் , இவரது திமுக ஆட்சியில் சாமானிய பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

நம்மை காக்கும் பெண்களை நாமே காக்க வேண்டிய சூழ்நிலை. உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து, கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?