மூச்சுவிடக் கூட நேரமில்லை… பணிச்சுமையால் இளம்பெண் மரணம் : தாய் பரபரப்பு புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
19 செப்டம்பர் 2024, 8:42 மணி
EY
Quick Share

கேரளாவை சேர்ந்தவர் அன்னா செபாஸ்ட்டியன். 26 வயதாகும் இவர் பட்டய கணக்காளராக புனேவில் உள்ள பன்னாட்டு ஆலோசனை நிறுவனமான எர்ன்ஸ்ட் ஆண்ட யான்(EY)நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

கடந்த 4 மாதங்களாக பணியாற்றி வந்த அன்னா செபாஸ்டியன் கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி வீட்டுக்கு திரும்பிய அவர், கட்டிலில் மயங்கி விழுந்து உயிரிழந்தாக கூறப்படுகிறது.

இது குறித்து அன்னா செபாஸ்டியனின் தாயார் அனிதா எர்ன்ஸ்ட் ஆண்ட யான் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் ராஜீவ் மேமானி உருக்கமாகக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், வேலைக்குச் சேர்ந்த 4 மாதங்களில், ஓய்வின்றி உழைத்தாள். அவளுக்கு வழங்கப்பட்ட பணிகளைச் செய்து முடித்தாள். இருப்பினும் நீண்ட நேரம் பணியாற்றியது அவளுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பைக் கொடுத்தது.

மேலும் படிக்க: ₹71 கோடியில் கோவையில் புதிய மேம்பாலம்… எப்போது திறப்பு? பொதுமக்களுக்கு வந்த குட் நியூஸ்!

மார்ச் மாதம் பணியில் சேர்ந்தவள், ஜூலை மாதம் உயிரிழந்தாள். குறிப்பாக வார இறுதி நாட்களிலும் வேலை, ஓவர் டைம் பணி, ஹிப்ட் நேரம் முடிந்து வீட்டிற்கு வந்தபிறகும் பணியாற்றுவது உள்ளிட்ட பணிச்சுமைக்கு ஆளாகி கடைசியாக அவளே எங்களை விட்டுச் சென்றுவிட்டாள்.

அவளது இறுதிச் சடங்குக்கு அவள் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து யாரும் வரவில்லை. எனது மகளைப் போல இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் யாரும் உயிரிழக்கக் கூடாது என்பதற்காகத் தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து எர்ன்ஸ்ட் & யங் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அந்த கடிதத்தை தீவிரமாக எடுத்துக்கொள்வதாக கூறியுள்ள நிறுவனம், அன்னா செபாஸ்டியனின் அகால மரணத்தால் நாங்கள் வருத்தப்படுகிறோம். அன்னாவை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள் ளநிறுவனம்,. அன்னா தமது நிறுவனத்தில் தணிக்கை குழுவின் ஓர் அங்கம் என குறிப்பிட்டுள்ளது.

  • CM Air அலற விட்ட மெரினா : மக்கள் நலனில் பூஜ்யம்… விளம்பரத்தால் ராஜ்ஜியம்!
  • Views: - 242

    0

    0