திமுக தலைவர் பதவியில் மாற்றம் வரும்… இது கண்டிப்பாக நடக்கும் : கொளுத்தி போட்ட அண்ணாமலை!!!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2023, 12:53 pm

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வெற்றி பெறவைக்கும் வகையில் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடை பயணத்தை தொடங்கியுள்ளார்.

ராமேஸ்வரத்தில் தொடங்கிய நடைபயணம் தற்போது மதுரையை வந்தடைந்துள்ளது. இந்தநிலையில் அதிமுக மற்றும் பாஜக தலைவர்களுக்கிடையே வார்த்தை போர் அதிகரித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை விமர்சித்த அண்ணாமலை, செல்லூர் ராஜூ அரசியல் விஞ்ஞானி என்றும் அவரது பேச்சுக்கு பதில் அளித்து எனது தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லையென கூறினார். இதற்கு அதிமுக தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அதிமுகவை தொட்டவன் கெட்டான் என அண்ணாமலைக்கு நன்றாக தெரிந்திருக்கும். அதிமுகவினரை விமர்சிப்பதை அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் எதிர் விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.
இந்தநிலையில் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலையிடம் செல்லூர் ராஜூ தொடர்பாக அவர் கூறிய கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் அளித்த அவர், செல்லூர் ராஜுவை பொறுத்த வரை அவர் குறித்து நான் சொன்ன கருத்தை ஒருபோதும் மாற்றிக்கொள்ள போவதில்லை.

10 ஆயிரம் முறை கேட்டாலும் ஒரே பதில் தான். செல்லூர் ராஜூ குறித்து பேசி என்னுடைய தரத்தை குறைத்துக் கொள்ளப்போவதில்லை. என்னுடைய பேச்சு அப்படியே காப்பி பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்” என அண்ணாமலை தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் பாஜகவிற்கு வாழ்வா? சாவா என போராட்டம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்திற்கு பதில் அளித்த அவர், வாழ்வா சாவா தேர்தல் பாஜகவுக்கு அல்ல, திமுகவுக்கு தான்.

இந்த தேர்தலில் திமுக தோற்றால் கட்சி தலைமையில் மாற்றம் வரும். நேர்மையாக உட்கட்சி தேர்தலை நடத்தினால் கனிமொழி தான் திமுகவின் தலைவர் ஆவார். காரணம் குடும்ப ஆட்சி வேண்டாம் என்று திமுகவினரே சொல்லிக் கொண்டிருக்கின்றனர் என தெரிவித்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!