சினிமாவில் உதயநிதி மும்முரம் காட்டுவதே இதுக்காகத்தான் : பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் இபிஎஸ் பரபரப்பு பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 December 2022, 8:35 am

அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அவிநாசி அத்திக்கடவு திட்டம் திமுக அரசு தற்போது ஆமை வேகத்தில் செயல்படுத்தி வருவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் குண்டடத்தில், பிற கட்சிகளில் இருந்து அதிமுக.,வில் இணையும, இணைப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இணைந்தனர்.

இதனை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திராவிட முன்னேற்ற கழகம் ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்படுவதாகவும், மாற்று கட்சியிலிருந்து வருபவர்களுக்கு மட்டுமே முக்கிய மந்திரி பதவிகள் கொடுத்திருப்பதாகவும், ஆட்சியில் சம்பாதித்த கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்ற உதயநிதி திரைப்படங்களில் நடித்து வருவதாக விமர்சனம் செய்தார்.

திரைத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கமிசன் பெறும் அரசாக திமுக அரசு செயல்படுகிறது என்றும், திமுக.,வின் திரைத்துறை ஆதிக்கத்தால் 150க்கும் மேற்பட்ட சிறு பட்ஜெட் படங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து இவ்வளவு நாட்களாகியும் பொதுமக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றும், அதிமுக கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் திமுக அரசு ரத்து செய்து விட்டது.

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்யப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மீண்டும் கொண்டு வரப்படும். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை அதிமுக கொண்டு வந்த காரணத்திற்காக அந்த பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

அதிமுக கொண்டு வந்த திட்டங்களைத்தான் திமுக தற்போது செயல்படுத்தி வருகிறது. மாண்டஸ் புயலால் பாதிப்பில்லை. ஆனால் இதில் சிறப்பாக செயல்பட்டதாக திமுக அரசு பொய் சொல்லி வருகிறது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாற்பது தொகுதிகளையும் வெல்வோம் என்று பேசினார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் பங்கேற்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!