ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொள்ளையடித்தவர்கள் என்னை பற்றி பேசக்கூடாது.. எனக்கு யாரும் போட்டியில்லை : அண்ணாமலை!!
Author: Udayachandran RadhaKrishnan24 மார்ச் 2024, 12:24 மணி
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொள்ளையடித்தவர்கள் என்னை பற்றி பேசக்கூடாது.. எனக்கு யாரும் போட்டியில்லை : அண்ணாமலை!!
கோவை நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். நேற்று முதல் அண்ணாமலை கோவை தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அண்ணாமலைக்கு எதிராக தி.மு.கவில் கணபதி ப.ராஜ்குமார், அ.தி.மு.க.வில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் பிரசாரத்திற்கு இடையே அண்ணாமலை இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மற்ற கட்சி வேட்பாளர்கள் என்னை என்ன வேண்டுமானலும் சொல்லலாம்; கோவை வேட்பாளர்களுடன் சண்டை போட நான் வரவில்லை;என்னுடைய வேலை மக்களிடம் பிரச்னைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பது”என்றார்.
Views: - 205
0
0