தமிழகத்தில் பாஜக ஒரே ஒரு இடத்தில்தான் வெற்றி பெறும்.. அந்த தொகுதி இதுதான் : சுப்பிரமணியன் சுவாமி பகீர்!!
Author: Udayachandran RadhaKrishnan24 மார்ச் 2024, 12:46 மணி
தமிழகத்தில் பாஜக ஒரே ஒரு இடத்தில்தான் வெற்றி பெறும்.. அந்த தொகுதி இதுதான் : சுப்பிரமணியன் சுவாமி பகீர்!!
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, 272 சீட்டுகளை பாஜக கைப்பற்றும் என கூறிய அவர் மோடி மீண்டும் பிரதமர் ஆக கூடாது என்றார்
மோடி 10ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை சீன ஆக்கிரமிப்பை தடுக்கவில்லை , விளம்பரத்தில் வேண்டுமானால் சாதனை செய்ததாக கூறுகிறார்கள் ஆனால் நாட்டின் பொருளாதார அமைப்பு மோசமான சூழ்நிலையில் உள்ளது
தமிழகத்தில் பாஜக சார்பில் நைனார் நாகேந்திரன் மட்டும் வெற்றிபெற வாய்ப்பு. திமுக – பாஜக நேரடி போட்டி என்று பேசுவது கனவு தான்.
ஒரு கட்சிக்கான அமைப்பு இருக்க வேண்டும், பணமும் விளம்பரமும் செய்தால் மட்டும் வெற்றி பெற முடியாது, அண்ணாமலையின் வெற்றி வாய்ப்பு குறித்து 2 நாட்களில் சொல்கிறேன் என்றார். மதுரை எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு அது எனக்கு தெரியாது என்றார்
0
0