விஸ்வரூபம் எடுக்கும் ஊட்டச்சத்து பெட்டக விவகாரம்.. முறைகேட்டில் தமிழக சுகாதாரத்துறை…? லஞ்ச ஒழிப்புத்துறையில் பாஜக புகார்…!!

Author: Babu Lakshmanan
9 June 2022, 1:39 pm
Quick Share

கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்தில் முறைகேடு நடந்துள்ளதாக மாநில லஞ்ச ஒழிப்பு போலீஸில் பாஜக புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அண்மையில், கர்ப்பிணி பெண்களுக்கு அரசு வழங்கும் சத்துப் பொருட்கள் பரிசுப் பெட்டக தொகுப்பில் “ஆவின் ஹெல்த் மிக்ஸ்” வழங்காமல், தனியார் தயாரிப்பான “Pro PL ஹெல்த் மிக்ஸ்” வழங்க ஒப்பந்தம் போடப்பட்டதால், அரசுக்கு 77 கோடி ரூபாய் வரை இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இனி எல்லாம் நலமே! கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் | Dinamalar Tamil  News

மேலும், பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கிய அனிதா டெக்ஸ்காட் நிறுவனத்திடம் இருந்து, மிக அதிக விலைக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தில் உள்ள 8 பொருட்களை அரசு வாங்குவதாகவும் குறிப்பிட்ட அவர், கருப்பு பட்டியலில் வைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய நிறுவனத்துடன் மீண்டும் டெண்டர் போட்டிருப்பது குறித்தும் கேள்வி எழுப்பினார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், டெண்டர் விடுவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன. அதற்குள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக எப்படிக் கூறுகிறார். டெண்டர் விட்டு யாருக்காவது கொடுத்திருந்தால் இழப்பு ஏற்பட்டதா இல்லையா என்று சொல்லலாம். அதற்கு முன்னதாகவே சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது என்றார்.ஆவினில் உள்ள டயரி ஒயிட்னர் என்னும் பால் பவுடர் ஊட்டச்சத்துக்கானது அல்ல. டி, காபியில் கலந்து சாப்பிடத்தான் பயன்படும் என்றார். விலை குறைவு என்பதற்காக ஆவினில் வாங்க முடியாது என்றும் ஆவினில் வாங்க வேண்டியதைத்தான் வாங்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில், கர்ப்பிணி பெண்களுக்கு அரசு வழங்கும் ஊட்டச்சத்து பெட்டகத்தில் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்களுடன் மாநில லஞ்ச ஒழிப்புத்துறையிடம் பாஜக துணை தலைவர் பால் கனகராஜ் புகார் அளித்துள்ளார்.

ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்ற முடியாமல் திமுக தவித்து வரும் நிலையில், ஏற்கனவே உள்ள திட்டங்களில் ஒன்றான கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி பாஜக புகார் அளித்திருப்பது திமுகவினருக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 734

0

0