1st கிளாஸ் பொருத்தம் இருக்கு… எல்லாம் நல்லபடியா முடுஞ்சுது… நயன் – விக்கிக்கு திருமணம் செய்து வைத்த ஐயர் பேட்டி..!!

Author: Babu Lakshmanan
9 ஜூன் 2022, 2:26 மணி
Quick Share

நீண்ட நாட்களாக காதலர்களாக வலம் வந்த நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவனின் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, இருவரின் திருமணம் சென்னை – மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்து வருகிறது.

இந்த திருமண விழாவுக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் குறிப்பிட்ட சில திரையுலக பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, நடிகர் ரஜினி, அஜித், ஷாருக்கான், கார்த்தி, சரத்குமார், ராதிகா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த திருமண நிகழ்ச்சியை பல கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக, விழாவில் கலந்துகொள்பவர்கள் செல்போன் கொண்டு வரவும், வீடியோ எடுக்கவும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

நேற்று முதல் மெகந்தி விழா என கோலாகலமாக தொடங்கிய திருமண நிகழ்ச்சியில், இன்று சரியாக 10.25 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி அணிவித்தார். மேளதாளம் முழங்க இந்துமுறைப்படி திருமணம் நடைபெற்றது.

இந்தத் திருமண நிகழ்ச்சி குறித்த ஒரு புகைப்படம் கூட வெளிவராத நிலையில், திருமணத்தை நடத்தி வைத்த திருத்தணி கோவிலைச் சேர்ந்த சாம்பு குருக்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் பேசியதாவது :- நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு வடபழனி, திருத்தணி, மயிலாப்பூர், திருவண்ணாமலை, காளிகாம்பாள் கோவில் என 20 சிவாச்சாரியர்கள் வந்திருந்தார்கள். எல்லா நடிகர், நடிகைகள் வந்திருந்தார்கள். எல்லாம் அற்புதமாக நடந்திருக்கிறது. ஒரு குறையும் இல்லாமல், ஆனந்தமா நடந்திருக்கு.

காலையில் 10.30 மணிக்கு திருமணம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு, முறைப்படி எல்லா பூஜைகளும் செய்தோம். வேதபாராயணம், திருமுறைபாராயணம் என மேள தாளத்தோடு இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. ஷாருக்கான், ரஜினி, சரத்குமார் என பல விஐபிக்கள் ஆசிர்வாதத்துடன் நடந்தது. நடிகர் விஜய் திருமணத்திற்கு வந்ததைப் போல தெரியவில்லை.

எங்களுக்கு ஒரு கட்டுப்பாடும் இல்லை. முறைப்படி மரியாதையுடன் அழைப்பிதழ் கொடுத்தனர். அவர்கள் பெயரில் சங்கல்ப்பம் செய்து பிரசாதம் கொடுக்க சொன்னாங்க, செய்தோம். ரெண்டு பேருக்கு பொருத்தம் 1st கிளாஸா இருக்கு. ஆனந்தமான பொருத்தம், வாழ்வாங்கு வாழ்வாங்க…, எனக் கூறினார்.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 761

    0

    0