CSK போட்டிக்கான டிக்கெட்டை பிளாக்கில் விற்று சர்ச்சை… கலக்கப்போவது யாரு பிரபலத்துடன் சேர்ந்து சிக்கிய துணை நடிகை !!

Author: Babu Lakshmanan
12 May 2023, 2:38 pm

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுக்களை பிளாக்கில் விற்பனை செய்த சர்ச்சையில் பிரபல டிவி நடிகர் சிக்கிக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

3 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. அதேவேளையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு இந்த ஐபிஎல் தொடர் கடைசியாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில், சென்னை அணி விளையாடும் அனைத்து போட்டிகளுக்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்து வருகிறது.

குறிப்பாக, சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டிகளுக்காக விற்கப்படும் டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுமார் 1,500 ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டுகள், 7 ஆயிரம், 8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை ரசிகர்கள் விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.

அந்த வகையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுக்களை பிளாக்கில் விற்பனை செய்த சர்ச்சையில் பிரபல டிவி நடிகர் மற்றும் துணை நடிகை சிக்கிக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி ஷோக்களில் நடித்து பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு, லாக்டவுன் சமயத்தில் நடிகை வனிதா விஜயகுமார் – பீட்டர் பால் திருமணத்தை சற்று ஓவராகவே விமர்சனம் செய்து, வனிதாவிடம் வாங்கி கட்டிக் கொண்டார்.

மேலும், டிக் டாக் பிரபலம் சூர்யா தேவி குறித்து தப்பு தப்பாக பேசி கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணியின் போட்டிக்கான டிக்கெட்டை பிளாக்கில் விற்பனை செய்த சர்ச்சையில் சிக்கி உள்ளார். சென்னை – டெல்லி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி சேப்பாக்கத்தில் நடந்த போது, போட்டிக்கான டிக்கெட்டுகளை, துணை நடிகை கும்தாஜுடன் இணைந்து, நாஞ்சில் விஜயன் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்து பிளாக்கில் விற்பனை செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!