வெட்கமே இல்லாமல் திராவிட மாடல்னு சொல்றாங்க… உண்மையில் ஹீரோ மோடி தான் : திமுக மீது மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சாடல்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2022, 6:01 pm
Minister Muurugan - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தமிழகத்தில் சரியான பராமரிப்பு இல்லாமலும், நிர்வாக சீர்கேடு காரணமாகவும் மின்வெட்டு ஏற்படுகிறது என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

பா.ஜ.,சிறுபான்மையினர் பிரிவு மாநிலச் செயலாளர் சதீஸ்ராஜா புதிய வீடு திறப்பு விழா இன்று தென்தாமரைகுளத்தில் நடைபெற்றது. விழாவில் மத்திய அமைச்சர் எல். முருகன், தமிழக பா.ஜ.,பொறுப்பாளர் ரவி, எம்.எல்.ஏ.,நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சிறுபான்மையினர் பிரிவு தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹீம், மாவட்ட தலைவர் தர்மராஜ்,மாவட்ட பொருளாளர் முத்துராமன், தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவர் கார்த்திகா பிரதாப், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் பிரதாப் உட்பட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் எல். முருகன் பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
தமிழகத்தில் திராவிட மாடல் என்பது என்ன என்று திமுக விளக்க வேண்டும். 50, 60 ஆண்டுகளாக திராவிட மாடலில் தான் ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் இன்றும் பல கோவில்களில் தலித் மக்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது.

பல கிராமங்களில் தலித் மக்கள் உள்ளே நுழைய முடியவில்லை இது தான் திராவிட மாடலா? ஜாதிக்கொரு சுடுகாடு வைத்து கொள்வது தான் திராவிட மாடலா? உண்மையான சமூக நீதியின் ஹீரோ பிரதமர் நரேந்திர மோடி தான்.

வெட்கம் இல்லாமல் எதை திராவிட மாடல் என்று திமுக கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான, சுகாதாரமான குடிநீரை மத்திய அரசு வழங்கியுள்ளது.

விவசாயிகளுக்கு சன்மான நிதி வழங்கியுள்ளோம். 2014 க்கு முன்பு விவசாயிகள் தற்கொலை என்பது அன்றாட நிகழ்வாக இருந்தது. அதன்பிறகு,அது போன்ற சம்பவவே நிகழ்ந்ததில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் தினந்தோறும் மீனவர் படுகொலை நடைபெற்றது. 600 க்கு மேற்பட்ட துப்பாக்கிச்சூடு நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு ஒரு துப்பாக்கி சூடு கூட நடக்கவில்லை. தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்தியுள்ளது மத்திய அரசு.

உள்ளாட்சியில் தனித்துநின்று கிட்டத்தட்ட 9 சதவீத வாக்குகளை பெற்று இன்று தமிழகத்தில் பா.ஜ.க மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது. 2014 க்கு பிறகு இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் மின்மிகை மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் சரியான பராமரிப்பு இல்லாமலும், நிர்வாக சீர்கேடு காரணமாகவும் மின் வெட்டு உள்ளது.

பொருளாதாரத்தில் கீழ்நிலையில் சென்றுள்ளது தமிழக அரசு. அதனை மக்கள் தலையில் சுமத்திவிட்டு, மத்திய அரசு மீது பழி போடுவதை ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

திமுக வின் தேர்தல் அறிக்கையே பொய்யானது தான். தாய்மார்களுக்கு ஆயிரம் வழங்குவோம் என்று கூறினார்கள். தற்போது அதைப் பற்றி பேசவே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

  • Madurai நான் என் ஹீரோவை பற்றி தான் பேசுவேன்… வில்லன்களை பற்றி பேசுவது என் வேலை இல்ல : சூடான சு.வெங்கடேசன் எம்பி!
  • Views: - 1399

    0

    0