தமிழகத்தில் மத்திய அரசின் திட்டம் லஞ்சம் இல்லாமல் மக்களுக்கு கொடுக்கப்படுகிறதா? அண்ணாமலை வைத்த செக் : களமிறங்கும் மத்திய அமைச்சர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2022, 8:36 pm

மத்திய அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க அடுத்த 20 நாட்களில் 50 மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வர உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், பாரதப் பிரதமர் தமிழகத்தைப் பார்த்து வரச்சொல்லி 76 மத்திய அமைச்சர்களை 30 நாட்களில் அனுப்பியிருக்கிறார்.

நேற்று வரை 19 அமைச்சர்கள் தமிழகத்திற்கு வந்திருக்கிறார்கள். பியூஷ் கோயல் இன்று வந்திருக்கிறார். இன்னும் 50 மத்திய அமைச்சர்கள் அடுத்த 20 நாட்களில் வர இருக்கிறார்கள்.

எப்படி மத்திய அரசின் திட்டம் கீழே வந்திருக்கிறது. லஞ்சம் இல்லாமல் கொடுக்கப்படுகிறதா? நேர்மையான முறையில் கொடுக்கப்படுகிறதா? யாருக்கு அந்த திட்டம் தேவையோ அவர்களுக்கு கொடுக்கப்படுகிறதா? என்பதை நம்முடைய மத்திய மத்திய அமைச்சர்கள் பார்வையிட வந்திருக்கிறார்கள் என்று கூறினார்.

  • Rape complaint against famous actor சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!