இது இயற்கை நீதிக்கு எதிரானது… ஒருத்தர் போயிட்டாரு… மீதமிருப்பவர்களையாவது : மத்திய அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை..!!!

Author: Babu Lakshmanan
28 February 2024, 12:58 pm

நீதிமன்றம் விடுவித்த பிறகும் அகதிகள் முகாமில் மூன்று பேர் வைக்கப்பட்டுள்ளது தேச நலனுக்கு எதிரானது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு விடுதலையான 4 பேரும் தங்களுடைய தாயகதுக்கு திரும்பவில்லை. சிறையில் இருந்து விடுதலை பெற்றாலும் அவர்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் இருந்து வந்தார்கள்.

சிறப்பு முகாம் என்ற பெயரில் எந்த வசதியும் இல்லாத ஒரு இடத்தில் சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் ஆகிய நால்வரும் அடைக்கப்பட்டனர். சாந்தன் தன்னுடைய தாயகத்திற்கு உயிருடன் திரும்ப வேண்டும் என போராடி வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கூட அவர் அவருடைய சொந்த நாட்டுக்கு அனுப்பப்படவில்லை என்பது வேதனைக்குரியது.

சாந்தனுடைய உடலை ஈழத்திற்கு எடுத்துச் செல்வதற்கு அவர்களுடைய உறவினர்கள் இங்கு வந்துள்ளார்கள். இந்நிலையில் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள மீதியுள்ள மூவரையும் அவரவர் விரும்புகின்ற பகுதிகளில் தங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என விசிக சார்பில் கோரிக்கை வைக்கிறேன்.

பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் தமிழகத்தில் தங்கள் குடும்பத்தினரோடு வசித்து வருகிறார்கள். அது போலவே மீதமுள்ளவர்களையும் உடனடியாக தங்கள் குடும்பத்தினரோடு தங்க உத்தரவு தர வேண்டும். உச்சநீதிமன்ற தீர்பையொட்டி சிறையில் இருந்து விடுதலை ஆன பிறகும் தேச நலன் என்ற பெயரில் சிறப்பு முகாமில் வைப்பது இயற்கை நீதிக்கு எதிரானது, என அவர் தெரிவித்தார்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!