திமுகவை இனி தேடினாலும் கிடைக்காது… தமிழ் – இந்தி என பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளும் திமுக ; பிரதமர் மோடி…!!!!

Author: Babu Lakshmanan
28 February 2024, 1:18 pm
Quick Share

மத்திய அரசின் மீது குற்றம் சொல்வதை மட்டுமே திமுக வேலையாக வைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் 17,400 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, நெல்லையில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, நெல்லை மாவட்ட பாஜக சார்பில் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

தொடர்ந்து, மேடையில் அவர் பேசியதாவது :- மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் மூலம் தமிழகத்தில் 1 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். குடிநீர், இலவச கேஸ் சிலிண்டர் திட்டம் மூலமாக தமிழக மகளிரின் ஆதரவு பாஜகவுக்கு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 40 லட்சம் மகளிருக்கு உஜ்வாலா சிலிண்டர் திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர். பாரத் ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் 50 லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

திமுகவும், காங்கிரஸ் கட்சியும் நாட்டை பிளவுபடுத்த பார்க்கின்றனர். மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் தமிழகத்தின் மூலைமுடுக்கில் உள்ள அனைவருக்குமே கிடைத்துள்ளது. நாடு 100 அடி வளர்ச்சியடைந்தால் தமிழகம் 100 அடி வளர்ச்சி பெறும் என்பது நான் அளிக்கும் உத்தரவாதம். மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசான திமுக உரிய ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. ராமர் கோவில் திறப்பின் போது வெறுப்பு அரசியலை திமுகவினர் பரப்பினர்

தமிழக மக்களிடம் நாங்கள் பாரபட்சம் காட்டுவதில்லை. பட்டியலினத்தைச் சேர்ந்த எல்.முருகன் இந்தி பேசும் மாநிலத்தில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். மோடியை மீறி யாரும் இந்தியர்கள் மீது கை வைக்க முடியாது. திமுகவை இனி தேடினாலும் கிடைக்காது ; திமுகவை முற்றிலும் அகற்றுவோம். தமிழ்நாட்டில் இனி திமுக என்ற ஒரு கட்சி இருக்காது ; அக்கட்சியின் வேஷம் விரையும் கலையும்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை எந்தவித உயிர்ச்சேதம் இன்றி மீட்டு வருகிறோம். மத்திய அரசின் மீது குற்றம் சொல்வதை திமுக வேலையாக வைத்துள்ளது ; அதையும் தாண்டி மக்களுக்கு நன்மை செய்து வருகிறோம்.

தனது குடும்ப வளர்ச்சியை தவிர மாநிலத்தின் வளர்ச்சியை திமுக கண்டு கொள்வதில்லை ;தமிழகத்தில் திமுக வாரிசு அரசியலை முன்னெடுக்கிறது. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி திமுக, காங்கிரஸ் சம்பாரிக்க நினைக்கிறார்கள். தமிழ் வேறு, இந்தி வேறு என்ற மொழி ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியை திமுக கொண்டுள்ளது. தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு இருந்துள்ளது. தமிழர்கள், தமிழர்களின் பிள்ளைகளை உயர்த்த நான் இருக்கின்றேன். எதிர்கட்சி தலைவர்கள் கூட பாஜகதான் வெற்றி பெறும் என்று கூறி வருகிறார்கள், என தெரிவித்தார்.

Views: - 142

0

0