‘நான் ஒரு டீச்சர்… இங்க எந்த வசதியும் செய்து கொடுக்கல’ ; அமைச்சர் உதயநிதியை கேள்விகளால் துளைத்து எடுத்த பெண்..!!

Author: Babu Lakshmanan
6 December 2023, 8:40 am
Quick Share

‘நான் ஒரு டீச்சர்… இங்க எந்த வசதியும் செய்து கொடுக்கல’ ; அமைச்சர் உதயநிதியை கேள்விகளால் துளைத்து எடுத்த பெண்..!!

சென்னையில் கடந்த இரு தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகள் குளம்போல காட்சியளிக்கின்றன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொருட்களை இழந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள பாதிப்புகளில் இருந்து மீட்கும் நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

புயல், மழை பாதிப்பு குறித்து சென்ட்ரல் அருகே கண்ணப்பர் திடலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். பிறகு, சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பேசினார்.

அதேபோல, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

அந்த வகையில், வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட வேளச்சேரியில் அமைச்சர்கள் உதயநிதி, கேஎன் நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது, அமைச்சர்களை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள், தங்களின் இன்னல்களை ஆவேசமாக எடுத்துரைத்தனர். அதில் பெண் ஒருவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நோக்கி, ஆங்கிலத்தில் படபடவென பேசினார். “நான் ஒரு ஆசிரியை, இங்கு பல மணி நேரமாக அடிப்படை வசதி கிடைக்காமல் அவதியுறுகிறேன். எந்த உதவியும் செய்யவில்லை”, என ஆங்கிலத்தில் கேள்விகளால் கேட்டு துளைத்து எடுத்தார்.

அப்போது, உங்களை ரொம்ப நேரம் எல்லாம் பேச அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் கேஎன் நேரு குறுக்கிட்டு பேசியது அங்கிருந்தவர்கள் அதிருப்தியடையச் செய்தது.

பின்னர், உங்களுக்கு இப்போது என்ன உதவி தேவை எனக் கேட்டு அந்தப் பெண்ணை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமாதானப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உடனே அருகில் இருந்த அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், நேரு ஆகியோர் அப்பெண்ணை கோபபடாதீங்க என சமாதானப்படுத்தினர்.

Views: - 266

0

0