ஆளுநரிடமே பொய் சொல்லுகிறார் CM ஸ்டாலின்… அவங்களுக்கு 2024 தான் கடைசி ; அடித்துச் செல்லும் வேலூர் இப்ராஹிம்!!

Author: Babu Lakshmanan
17 June 2023, 2:12 pm
Quick Share

வேலூர் ; தமிழக ஆளுநரிடம் தவறான தகவல் அளித்ததால் அமைச்சர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கவில்லை என்று வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் வேலுர் தொகுதியில் பாஜகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் வேலூர் பாஜக அலுவலகத்தில் பாஜக தேசிய சிறுபான்மையின தலைவர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம் கூறியதாவது:- கடந்த காலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரை அவமதிப்பது என்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. சட்டமன்றத்திலேயே ஆளுநரை வைத்துக் கொண்டு அவருக்கு எதிராக இழிவாக பேசியதன் காரணத்தினால் ஆளுநர் எழுந்து புறப்பட்டு செல்லக்கூடிய ஒரு நிலையை அவர்தான் உருவாக்கினார்.

அதே மாதிரி ஒரு விஷயத்திற்காக அமைச்சரவை மாற்றுகிறோம் என்று தகவல் அளிப்பதாக இருந்தால் அதற்கு காரணம் குறிப்பிட வேண்டும். அமைச்சரை மாற்ற வேண்டும் என்றால் ஒரு வழக்கு இருக்கிறது அந்த வழக்கில் வருமான வரித்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதனால் வேறு அமைச்சரை மாற்றுகிறோம் என்று சொன்னால் அது உண்மையான தகவல்.

அப்படி கவர்னரிடம் சொல்லாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறார் அதனால் மாற்ற அமைச்சரை நாங்கள் மாற்றுகிறோம் என்று பொய்யான விஷயத்தை அனுப்பினால் அதை ஆளுநர் மிஸ்ட்லீடிங், மிஸ் கைடிங், என்று அந்த தகவலை குறிப்பிட்டுள்ளார். உண்மை தகவலைச் சொன்னால் நிச்சயமாக ஆளுநர் பரிசீலித்து தமிழக முதல்வர் யாரை அமைச்சராக ஆக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்திருப்பார்.

ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார் சட்டத்தை ஏமாற்றுகிறார். அதனால், இவர் இன்றைக்கு கவர்னர் இல்லாமல் ஒரு ஆட்சி நடத்த வேண்டும் என்று நினைத்தால் அரசியல் அமைப்புக்கு எதிராக பிரிவினை வாதத்தை உருவாக்குகிறார். பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வன்மையாக எங்களுடைய கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறோம் என்று கூறினார்.

மேலும், கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த இப்ராஹிம் கூறியதாவது :- வைகோ ஸ்டாலினை பற்றி பேசிய கடுமையான வார்த்தைகள் எல்லாம் மறந்திட முடியாது. ஸ்டெர்லைட் விஷயத்துல வைகோ பேசியதை கடந்து, இரண்டு நாளைக்கு முன்னால வைகோ அளித்த பேட்டியில் ஆளுநரை பேசிய வார்த்தைகளை வார்த்தைகளாகவே சொல்ல முடியாது. அவ்வளவு இழிவுபடுத்தி கேவலமாக அசிங்கப்படுத்தி ஒரு எதிர்க்கட்சித் தலைவராக அன்றைக்கு இருந்த ஸ்டாலின் அவர்களை பேச முடியும் என்றால், அது வைகோவுக்கு மட்டும்தான் சாத்தியம்.

அவர்கள் தூக்கிப்பிடித்தால் தலைக்கு மேல் தூக்கி பிடிப்பார். ஒருத்தரை இழிவுபடுத்த நினைத்தால் கால்ல போட்டு மிதிக்கிற அளவுக்கு பேசுவாரு. இது அவருடைய ஸ்டைலு. அவருடைய வார்த்தைக்கு பெருசா முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரைக்கும் நாங்கள் ஒரு ஊழலற்ற கட்சி. அதை சொல்வதற்கான நெஞ்சுருதி எங்களுக்கு இருக்கிறது.

பிரதமர் தலைமையிலான ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. மத்திய அமைச்சர் அவையில் யார் மீதும் ஊழல் குற்றச்சாட்டு இல்லை. எந்த நலத்திட்டங்களை ஒதுக்கியதிலும் எந்த குற்றச்சாட்டும் கிடையாது. அதனால் நாங்கள் என்ன செய்கிறோம் மக்களுக்காக என்பதை எடுத்துச் செல்கிறோம். அதே நேரத்தில் யார் ஊழல் செய்தாலும், தயவு தாட்சண்யம் இல்லாமல் எதிர்ப்போம். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

25 நாடாளுமன்ற தொகுதி NDA வெல்லும் என்பது குறைந்தபட்ச எதிர்பார்ப்பு. எங்களுடைய நோக்கம் 39 வெல்ல வேண்டும் என்பதுதான். அதே வேளையில் 25 தொகுதி நிச்சயமாக வெல்ல வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம். அதில், குறிப்பாக வேலூர் பாராளுமன்ற தொகுதி இந்த முறை நிச்சயமாக தாமரை வெல்லும். அதற்கான கடினமான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

எதிர் வரக்கூடிய காலங்களில் மக்களை சந்தித்து பல்வேறு நலத்திட்டங்களை கொடுப்பதோடு, ஊழல் ஆட்சியில் இன்றைக்கு எந்த அளவிற்கு இந்த வேலூர் மாவட்டத்தில், குறிப்பாக சட்டமன்ற தொகுதியில் வேலூர் சட்டமன்ற தொகுதியில் கே வி குப்பம் சட்டமன்றத் தொகுதி ஊழல் நடந்து இருக்கிறது. குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் சாலை சீரமைப்பு தெரியவில்லை தண்ணீர் வரவில்லை அந்த மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகவில்லை இதையெல்லாம் மக்கள் இடத்தில் நாங்கள் கொண்டு செல்வோம் நிச்சயமாக பாரதிய ஜனதா கட்சிக்கு ஏறு முகம் தான் அனைவரும் அறிந்து திமுகவிற்கு இறங்குமுகம் என்பது அனைவரும் அறிந்த உண்மை என்று கூறினார்.

Views: - 276

0

0