எத்தனை துரோகிகள் வந்தாலும் நானும் எடப்பாடியாரும் மீண்டு வருவோம் : பிரேமலதா விஜயகாந்த் பேச்சு..!

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2024, 6:03 pm

தேமுதிக நிர்வாகி இல்ல விழாவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில்: திருப்பரங்குன்றம் தேமுதிக நிர்வாகி அழகர்சாமி இல்ல விழாவில் பிரேமலதா பேசியதாவது வாழ்க்கையின் கையில் கை குழந்தையாக இருந்து மணமகனாக மாறி இருக்கும் தீபக்கை பார்ப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.

மதுரைக்கு வந்துவிட்டால் தலைவர் குழந்தையாக மாறிவிடுவார். கேப்டன் எம்ஜிஆரின் தொண்டர், ரசிகர், விசுவாசி. சங்க காலத்தில் எங்க அப்பா அம்மா இருவரும் இரட்டை இலைக்கு தான் வாக்களிப்பார்கள்.

எம்ஜிஆர் வேற கருப்பு எம்ஜிஆர் வேற இல்லை. 2018 ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒரே கூட்டணியால் அமைந்தார்கள். சில துரோகிகள் சூழ்ச்சியால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.

கூட்டணியை உடைப்பதற்காகவே சில துரோகிகளை உருவாக்கினார்கள். எடப்பாடியாரும் நானும் எத்தனை துரோகங்கள் சூழ்ச்சிகள் வந்தாலும் அத்தனையும் வீழ்த்தி 2011 வரலாறை 2026 இல் நிகழ்த்துவோம்.

இதையும் படியுங்க: அதிமுக பிரமுகரை ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டு : திமுக கவுன்சிலர் கணவர் உட்பட 3 பேர் கைது!

விருதுநகரில் விஜய பிரபாகர் சூழ்ச்சி செய்யப்பட்டு துரோகிகளால் வீழ்த்தப்பட்டார் அவர் தோற்கவில்லை தோற்கடிக்கப்பட்டார். திருப்பரங்குன்றத்தில் இன்று கந்த சஷ்டி மூன்றாம் நாள்.

கேப்டன் ஒன்றாக மதித்த அவ்வளவு வேலை இருந்தாலும் கந்த சஷ்டி விரதம் நிச்சயமாக கடைபிடிப்பார். 2026 இல் சரித்திரத்தையும், சகாப்த்தத்தையும் பெற்றே தீருவோம். 200 தொகுதி அல்ல 234 தொகுதிகளிலும் வெற்றியை பெறுவோம் என் கூறினார்.

  • Sathyaraj Daughter Divya Sathyaraj என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையான காலம் இது.. பிரபல நடிகரின் மகள் வேதனை!
  • Views: - 349

    0

    0