முகத்தில் வழிந்து ஓடிய ரத்தம்… ஐசியூவில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி ; என்ன நடந்தது.. பரபரப்பில் மேற்கு வங்கம்..!!!

Author: Babu Lakshmanan
15 March 2024, 9:07 am

ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முகத்தில் ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டதாக திரிணாமுல காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ X தளப்பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய தகவல் வெளியிடப்பட்டது. இது அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பிறகு நேற்றிரவே வீடு திரும்பியதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

வீட்டில் உள்ள அலமாரியின் மீது மோதியில் அவரது நெற்றியில் வெட்டு காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதனிடையே, அவர் விரைந்து குணமடைய வேண்டும் என்று பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் X தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!