ஜெயலலிதா நினைவு நாள் எப்போது? அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2022, 9:57 am
JJ Eps - Updatenews360
Quick Share

ஜெயலலிதா நினைவு நாளை அனுசரிக்க, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக முடிவு செய்துள்ளது.

ஜெயலலிதா நினைவு நாளை, டிசம்பர் 5 ஆம் தேதியே அனுசரிக்க, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக முடிவு செய்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 தேதி உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்திருந்த நிலையில், அவர் டிசம்பர் 4 ஆம் தேதியே இறந்திருக்கலாம் என சாட்சியங்கள் அடிப்படையில் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்திருந்தது.

இதனால் ஜெயலலிதாவின் நினைவுநாள் எப்போது அனுசரிக்கப்படும் என கேள்வியெழுந்தது. இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, ஜெயலலிதாவின் நினைவு நாளை எப்போதும் போல் டிசம்பர் 5 ஆம் தேதியே கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளது.

அன்றைய தினம்,மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில், எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துவார் என அக்கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 380

0

0