மத அரசியலா? மதவாதமா? அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் மவுனம் ஏன்…? கனிமொழியை சீண்டும் பாஜக!!

Author: Babu Lakshmanan
22 January 2022, 11:18 am
Quick Share

சென்னை : மதமாறச் சொல்லி தொந்தரவு கொடுத்ததால் அரியலூர் விடுதி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக திமுக எம்பி கனிமொழி இன்னும் எந்தவித கருத்தும் தெரிவிக்காததற்கு, பாஜக விமர்சனம் செய்துள்ளது.

அரியலூர் மாவட்டம் வடுக பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகள், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள மைக்கேல்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கி வகுப்புக்குச் சென்று வந்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 482 மதிப்பெண் பெற்ற மாணவி படிப்பில் சிறந்து விளங்கியுள்ளார்.

இவரின் குடும்ப வறுமையை பயன்படுத்தி கொண்ட பள்ளி நிர்வாகம் மதம் மாற கோரி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், படிக்க விடாமல் பள்ளியை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த மாணவி மயக்க மருந்து கொடுத்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து பள்ளியின் விடுதி காப்பாளர் சகாயமேரி கைது செய்யப்பட்டார்.

மாணவியின் மரணத்திற்கு காரணமான கிறிஸ்துவ அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு, பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், கண்டனம் தெரிவித்த திமுக எம்பி கனிமொழி, இந்த அரியலூர் மாணவியின் தற்கொலை விவகாரத்தில் மவுனம் காப்பதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,” பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ஒருவரால் ஒரு மாணவிக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு, பள்ளிக்கு எதிராக கொதித்தெழுந்த திமுக எம்பி கனிமொழி அவர்களே, தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி புனித ஹிருதய பள்ளியின் மதமாற்ற கொடுமையினால் உயிரிழந்த மாணவியின் மரணம் குறித்து உங்களின் மௌனம் ஏன்?

kanimozhi 02 updatenews360

மத அரசியலா? மதவாதமா? ஓ! நீங்கள் பகுத்தறிவுவாதியல்லவா? மறந்து விட்டேன்!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 2837

0

0