கலவரம் பண்ணாதான் தமிழகத்தில் காலூன்ற முடியும்.. நயினாருக்கு சிக்கலை ஏற்படுத்திய பரபரப்பு ஆடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
10 June 2024, 4:37 pm

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அதிமுக, பாஜக கூட்டணி தோல்வியை சந்தித்தது.

குறிப்பாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இந்நிலையில், இந்து மக்கள் கட்சி செயலாளர், நெல்லை பாஜக மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் பேசிய பரபரப்பு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த ஆடியோவில், “தமிழ்நாட்டில் 40 இடங்களில் ஒன்றில் கூட நம்மால் வெல்ல முடியவில்லை. இது வேதனையாக உள்ளது. நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் கொடுத்த பணத்தை முறையாக விநியோகிக்காததே தோல்விக்கு காரணம். கலவரம் பண்ணாதான் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியும்” என்று பேசியுள்ளனர்.

மேலும் படிக்க: மகன் தோல்வி.. பொறுப்பேற்காமல் சிறுபிள்ளைத்தனமாக பிரேமலதா பேசுகிறார் : மாணிக்கம் தாகூர் எம்பி!

தேர்தலுக்கு முன்பாக தாம்பரம் ரெயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என கூறப்படும் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

  • good bad ugly movie closes the box office in tamilnadu இனி குட் பேட் அக்லிக்கு மூடு விழாதான்! மூணே வாரத்துல இப்படி சோலியை முடிச்சிட்டாங்களே?