இனி பைக்கை தொடக்கூட முடியாது ; 10 ஆண்டுகளுக்கு TTF வாசனின் கதை முடிந்தது… போக்குவரத்துறை பிறப்பித்த உத்தரவு!

Author: Babu Lakshmanan
7 October 2023, 11:22 am

தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் யூடியூபர்களில் ஒருவர் டிடிஎஃப் வாசன். கோவையைச் சேர்ந்த இவர் தொடர்ச்சியாக அவர் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். அதிவேகமாக வாகனம் ஓட்டி, அதை சமூக வலைத்தளங்களிலும் இவர் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வருகிறார். அனுமதிக்கப்பட்ட வேகத்தைத் தாண்டி மிக வேகமாக பைக் ஓட்டும் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்தச் சூழலில் தான் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பைக்கில் ஸ்டண்ட் செய்ய முயன்ற போது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் டிடிஎஃப் வாசனுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே, மோட்டர் வாகன சட்டப்படி பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஒட்டியதாக டிடிஎப் வாசன் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, ஜாமீன் மனு விசாரணையின் போது, டிடிஎஃப் வாசனின் பைக்கை எரித்து விடலாம் என்று நீதிபதியே காட்டமாக கூறியிருந்தார்.

இதனிடையே, யூடியூபர் டிடிஎப் வாசனின் ஒட்டுநர் உரிமத்தை ரத்து செய்யத் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை அளித்தது. அதனை ஏற்று, டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர் வாகனத்தை ஓட்ட முடியாது. இது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!