பட்டப்பகலில் கோவலில் அம்மன் தாலி திருட்டு : மர்ம ஆசாமிக்கு போலீசார் வலை

Author: kavin kumar
25 February 2022, 11:12 pm
Quick Share

கரூர் : கரூரில் அம்மன் கழுத்தில் இருந்த தாலியை அறுத்துக் கொண்டு சென்ற டிப் டாப் ஆசாமியை போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், அரசு காலனி பகுதியில் கரூர் டூ வாங்கல் ரோட்டில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ புற்றுக்கண் மாரியம்மன் ஆலயம் தமிழக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்கும் நிலையில், கரூர் மாநகரின் புறநகர் பகுயில் அமைந்துள்ள அந்த கோவிலில் அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 23 ம் தேதி புதன்கிழமை அன்று பட்டப்பகலில், இரு சக்கர வாகனத்தில் டிப் டாப் உருவத்தில் ஒரு நபர் கோவில் உட்பிரகாரத்தை சுற்றி பார்த்து விட்டு நோட்டமிட்டு பின்னர்,

ஆலயத்தின் அம்மன் சன்னதிக்கு நேராக உள்ள கேட்டினை திறந்து பின்னர், கருவறைக்குள் நுழைந்த அந்த நபர் மூலவர் அம்மன் கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தாலி பொட்டு இரண்டினை தாலியுடன் அறுத்து எடுத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். வழக்கம் போல் கோவிலை திறந்த நீலாவதி என்பவர் மதியம் கோவில் நடையை சாத்த சென்ற போது அம்மன் கழுத்தில் இருந்த தாலி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து கோவில் நிர்வாக இயக்குனரும், அவரது கணவருமான சேகர் குருஜியிடம் தகவல் தெரிவிக்க, வெங்கமேடு காவல் நிலைய காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அந்த டிப்டாப் ஆசாமியின் முகம் மற்றும் அவர் வந்து சென்ற பைக்குகள் அதன் எண் ஆகியவைகளை ஆலய கேமிராக்கள் தெள்ளத்தெளிவாக காட்டுகின்றன. மேலும், இந்த சம்பவம் குறித்து வெங்கமேடு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணையை முடிக்கி விட்ட நிலையில், இது தொடர்பான விடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதே கோவில் ஏற்கனவே இரண்டு முறை அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருட்டுப் போனதால் தற்போது சி.சி.டி.வி கேமரா பொறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் தாலி திருட்டு போயிருப்பது அப்பகுதி பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், தற்போது தமிழகத்தின் பெண்ணின் கழுத்தில் இருக்கும் தாலிக்கொடிகளை பறித்து செல்லும் திருடர்கள் மத்தியில், அம்மன் ஆலயத்தில் யாரும் இல்லாத நிலையில், அம்மனின் கழுத்தில் இருக்கும் தாலிகொடியினை அறுத்து செல்வது ஒரு படி மேலே திருட்டு சம்பவத்தினை குறிப்பதாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Views: - 773

0

0