நிலுவையில் உள்ள ஊதியம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் : மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அலுவலகம் முற்றுகை…

Author: kavin kumar
27 January 2022, 4:30 pm

புதுச்சேரி : நிலுவையில் உள்ள ஊதியம் வழங்கக்கோரி 100 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் மாநிலம் முழுவதும் 855 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில் சுமார் 1600 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அங்கன்வாடியில் பணி புரிந்து வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஐந்து மாத ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் சாரம் பகுதியில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நிலுவையில் உள்ள போனஸ் மற்றும் ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

  • Kamal haasan decided to not act in other companies இதுதான் என்னோட கடைசி படம்-திடீர் முடிவெடுத்த கமல்ஹாசன்? பகீர் கிளப்பும் தகவல்…