படித்து வருபவர்களை விட விளையாட்டு வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் ; இளைஞர்களுக்கு ஊக்கம் கொடுத்த வினோஜ் பி செல்வம்

Author: Babu Lakshmanan
29 January 2024, 1:58 pm

படித்து வருபவர்களை விட விளையாட்டு வீரர்களுக்கு அதிகளவிலான வாய்ப்புகள் இருப்பதாக பாஜக மாநில செயலாளர் மனோஜ் பி செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் வினோஜ் பி செல்வம் பாஜக பாஜக மாநில செயலாளராக இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், பாஜகவின் கொள்கை மற்றும் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதோடு, எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்து வருகிறார்.

தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையில் வினோஜ் பி செல்வமும் கலந்து கொண்டு தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகின்றனார்.

இவ்வளவு பிஸி வேளைகளில் நேற்று ஒரு நாள் யாத்திரைக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஃபிட்டான அரசியல் தலைவராக வலம் வரும் வினோஜ் பி செல்வம், சென்னை திரும்பிய பிறகு, நேரு விளையாட்டு அரங்கம் அருகே செயல்பட்டு வரும் குத்துச்சண்டை பயிற்சி மையத்திற்கு நேரில் சென்று, பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகளிடம் கலந்துரையாடினார்.

அவர்களின் பயிற்சியை பார்வையிட்ட அவர், வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையை வழங்கினார். மேலும், அவர்களுக்கு ஷுக்களையும் வழங்கி வாழ்த்தினார்.

பின்னர், அவர்கள் மத்தியில் பேசிய வினோஜ் பி செல்வம், படித்து வருபவர்களை விட விளையாட்டு வீரர்களுக்கு அதிகளவிலான வாய்ப்புகள் இருக்கிறது. குறிப்பாக, பிரதமர் மோடி விளையாட்டுக்காக நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். உங்கள் பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் வகையில் நீங்கள் முன்னேறுவீர்கள், அதற்கு மத்திய அரசு உங்களுக்கு துணை நிற்கும், இதற்கான உத்தரவாதத்தை நான் கொடுக்கிறேன்,” எனக் கூறினார்.

மத்திய அரசின் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் நிலையில், பாஜக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம், விளையாட்டு வீரர்களை சந்தித்து அளித்த ஊக்கம், அவர்களிடையே மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!