SK-விற்கு சவால் விடும் தனுஷ் …முடிஞ்சா மோதி பாரு…!

Author: Selvan
7 November 2024, 7:29 pm

தமிழ் சினிமாவில் இவருகிட்ட இவ்வளவு படங்கள் கைவசம் இருக்கா என பலரையும் ஆச்சர்யத்தில் மிரட்டியுள்ளார் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் தனுஷ்.

இந்த ஆண்டு ஏற்கனவே இரண்டு படங்கள் நடித்து மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றார்.

இயக்குனராக மூன்றாவது முறையாக களமிறங்கும் படம் தான்” நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” திரைப்படம் .

அதை தொடர்ந்து சேகர் கமுலா இயக்கத்தில் “குபேரா” திரைப்படத்தில் அவர் நடித்து முடித்திருக்கிறார்.

அவருடைய நான்காவது இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் “இட்லி கடை”.

அதைத்தொடர்ந்து மீண்டும் பிரபல இயக்குனர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகும் இசைஞானி இளையராஜாவின் பயோ பிக்கில் அவர் நடிக்க உள்ளார் என்ற தகவலும் சினிமா ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

அடுத்து ஆனந்தராஜ் இயக்கத்தில் ஒரு பாலிவுட் திரைப்படத்திலும் அவர் விரைவில் நடிக்க இருப்பதாக உறுதியாகியுள்ளது.

வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு திரைப்படத்திலும் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார். அந்த படத்தை போர் தொழில் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்க உள்ளார் .

அதேபோல அமரன் திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உடன் இணைந்து கோபுரம் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு திரைப்படத்திலும்

தளபதி 69 படத்தை முடித்த பிறகு எச் வினோத் உடன் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார்.

ரப்பர் பந்து பட இயக்குனர் தமிழுடன் இணைந்து , டான் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஒரு படத்தில் தனுஷ் நடிக்கிறார்.

இதையும் படியுங்க: தமிழ் சினிமாவிற்கே “THUG LIFE” கமல் செய்ய போகும் அதிரடி சம்பவம் …!

மேலும் மாரி செல்வராஜ் குறிப்பிட்ட அந்த பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படத்திலும், வெற்றிமாறனின் வட சென்னை படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

இது மட்டுமில்லாமால் மஞ்சுமல் பாய்ஸ் படத்தை இயக்கிய சிதம்பரம் இயக்கத்திலும் ஒரு திரைப்படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி தனுஷ் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது .

இதில் எத்தனை படங்கள் அவருக்கு வெற்றியை வாரி குவிக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

  • manikandan rajesh sobhithaseparation சினிமா பிரபலங்களுக்கு என்ன ஆச்சு…விவாகரத்து வாங்கிய பிரபல நடிகை…!
  • Views: - 120

    1

    0