மெல்ல மெல்ல இறுகும் சொத்து குவிப்பு வழக்கு.. திமுக எம்பி ஆ.ராசாவின் ரூ.55 கோடி மதிப்புள்ள சொத்து முடக்கம் ; அமலாக்கத்துறை அதிரடி

Author: Babu Lakshmanan
22 December 2022, 7:56 pm
A Raja 1 - Updatenews360
Quick Share

சொத்துகுவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசாவின் பினாமிக்கு சொந்தமான ரூ.55 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ராசா, கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

அதாவது வருமானத்திற்கு அதிகமாக 575% சதவிகிதம் சொத்து சேர்க்கப்பட்டதாக இந்த புகாரில் கூறப்பட்டது. கடந்த 2015ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 16 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சென்னை, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியது.

இந்த நிலையில், 2004-2007 காலகட்டத்தில் மத்திய அமைச்சராக ஆ.ராசா இருந்த போது பினாமி நிறுவனத்தின் பெயரில் கோவையில் வாங்கப்பட்ட ரூ.55 கோடி மதிப்புள்ள 45 ஏக்கர் நிலத்தை மத்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்த நிலம் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிடம் லஞ்சமாக வாங்கியதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Views: - 247

0

0