கனமழையால் தண்ணீரில் தத்தளிக்கும் ராசிபுரம் அரசு மருத்துவமனை.. மிதக்கும் படுக்கைகள்… பயத்தில் வெளியேறிய நோயாளிகள்!!

Author: Babu Lakshmanan
29 August 2022, 1:35 pm

நாமக்கல் : ராசிபுரத்தில் பெய்த வரலாறு காணாத கனமழையின் காரணமாக, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தண்ணீர் சூழ்ந்து வெள்ளம் போல காட்சியளிக்கிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நேற்று காலை முதலே வாணம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை வரலாறு காணாத மலை பெய்ய தொடங்கியது. சுமார் 3 மணி நேரமாக தொடர்ந்து பெய்த கணமழையால் ராசிபுரம் நகரமே நீரில் மூழ்கியது.

இதில் ராசிபுரம் அரசு மருத்துவமனை நீரில் மூழ்கியதால் பயத்தில் நோயாளிகளை ஊழியர்கள் பத்திரமாக மாற்று அறையில் அனுமதித்தனர். மேலும், மழைநீர் வீடுகளில் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினர்.

தொடர் மழை காரணமாக ராசிபுரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாயினர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?