கோவையில் சூடு பிடித்த தேர்தல் பிரச்சாரம் : நூதனமுறையில் வோக்கு சேகரித்த திமுக வேட்பாளர்….

Author: kavin kumar
9 February 2022, 8:46 pm

கோவை : கோவை மாநகராட்சியின் 52 வது வார்டு திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி பொதுமக்களுடன் கும்மி அடித்தும் நடனமாடியும் வாக்கு சேகரித்தார்.

கோவை மாநகராட்சியின் 52 வது வார்டு திமுக வேட்பாளர் தினமும் மக்களோடு மக்களாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில், கோவை பீளமேடு புதூரில் வாக்கு சேகரிப்பின்போது, பொதுமக்களுடன் இணைந்து கும்மி அடித்தும், நடனம் ஆடியும் நூதன முறையில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இது அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து, திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி வீதி வீதியாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?