அதிமுக கவுன்சிலர்னா அலட்சியமா? எந்த வார்டுகளும் சுத்தமாவே இல்ல.. தனியார் ஒப்பந்தாரர்கள் நிறுவனத்தை கண்டித்து அதிமுகவினர் தர்ணா!

Author: Udayachandran RadhaKrishnan
22 August 2024, 2:18 pm

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 30 வது வார்டில் மலை போல் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றப்படாமல் SWMs துப்புரவு பணி மேற்கொள்ளும் பணியாளர்கள், சூப்பர்வைசர்கள் மெத்தனமாக செயல்படுவதாகவும், இதுகுறித்து மாமன்ற கூட்டத்திலும் மேயரிடமும், அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

அதிமுக மாமன்ற உறுப்பினர் என்பதற்காக அலட்சியம் காட்டுவதாக கூறி அதிமுக 30-வது வார்டு மாமன்ற உறுப்பினர் புஷ்பலதா தலைமையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள Swms அலுவலகம் முன்பு முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்களுடன் இணைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி நிச்சயம் குப்பை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி அளித்த பின்பு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • murali love actress sivaranjani but she did not accept him மது போதையில் அத்துமீறல்? திருமணம் ஆன பின்பும் நடிகையை காதலித்த முரளி! அடக்கொடுமையே?